வெள்ள நீரில் துள்ளி வந்த மீன்கள் - வலை வீசி பிடித்த கிராம மக்கள்
வெள்ள நீரில் துள்ளி வந்த மீன்கள் - வலை வீசி பிடித்த கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
திருவண்ணாமலை அருகே திண்டிவனம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் மக்கள் வலைவீசி மீன் பிடித்தனர்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நவம்பர் 30-ஆம் தேதி இரவு கரையைக் கடந்தது. புதுச்சேரி மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் பெய்தது.
இதனால் திருவண்ணாமலையில் உள்ள திண்டிவனம் சாலையில் நொச்சிமலை ஏரியில் இருந்து வெளியேறிய நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ள நீரில் கிராம மக்கள் பலர் மீன் பிடித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



