You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கணவனை பிரிந்த மனைவி
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள சித்தர்புரா கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.
இங்கு நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊர்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். இங்கு குழாய்கள் இருந்தாலும் அதில் தண்ணீர் வருவதில்லை.
கடந்த 20 வருடங்களாக இந்த குழாய்களில் தண்ணீர் வருவதற்காக இந்த மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அரசுகள் இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று கூறுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு தண்ணீர் லாரிகள் வழியாக அவ்வப்போது நீர் வழங்கி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)