அரிய நோயினால் பாதிப்பு: தன்னம்பிக்கையோடு சாதித்துக் காட்டும் டெல்பின் ஸ்டேபினா

அரிய நோயினால் பாதிப்பு: தன்னம்பிக்கையோடு சாதித்துக் காட்டும் டெல்பின் ஸ்டேபினா
பிரசுரிக்கப்பட்டது

செங்கல்பட்டை சேர்ந்த டெல்பின் ஸ்டெபினோ தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்தாலும் சக்கர நாற்காலியில் இயங்கியபடியே தன்னம்பிக்கை பேச்சாளராகவும் மனநல ஆலோசகராகவும் செயல்படுகிறார்.

Muscular Dystrophy என்று அழைக்கப்படும் தசைச்சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய தசைகள் செயல் இழந்து கொண்டே வரும். உடலுக்குள் அதற்கு மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆனாலும் தன்னுடைய தன்னம்பிக்கையால் அதை எதிர்த்து போராடி என்று மற்றவர்களுக்கும் உதாரணமாய் திகழ்கிறார் டெல்பின்.

தான் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அது நாளடைவில் உடலில் உள்ள அத்தனை தசைகளையும் பாதிக்கும் என்பது பற்றியும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வரும் என்ற தகவல் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இப்படியே 4 வருடங்களை கடந்திருக்கிறார் டெல்பின். ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரை தேற்ற, ஒரு சின்ன நம்பிக்கை ஒரு சம்பவத்தின் மூலம் ஏற்பட்டது.

ஒரு நாள் நள்ளிரவு ஒரு சிறுவன் , அவருக்கு தான் மனஉளைச்சலில் இருப்பதாலும், தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும், யாருடனாவது இப்போது பேசினால் நன்றாக இருக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்ப, டெல்பின் அந்த சிறுவனிடம் பேசி இருக்கிறார்.

20 நிமிட உரையாடலுக்கு பிறகு அச்சிறுவன், தூங்க சென்றான். காலை மீண்டும் டெல்பினை அழைத்த சிறுவன், அக்கா, நேற்று நீங்கள் என்னிடம் பேசியது எனக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. என்னுடைய தற்கொலை எண்ணம் என்னிடம் இருந்து விலகிவிட்டது என்று சொல்ல அப்போது தான் டெல்பினுக்கு பொறி தட்டியது. தன்னுடைய பேச்சு மற்றவரின் வாழ்க்கையில் வசந்தத்தை வீசியது அவருக்கு பெருமகிழ்வை கொடுத்திருக்கிறது. (முழு தகவல் காணொளியில்)

தயாரிப்பு: ஹேமா ராகேஷ்

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமூவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: