விருந்தாளி போல வீட்டு முன் வந்து நின்ற யானை
விருந்தாளி போல வீட்டு முன் வந்து நின்ற யானை
பிரசுரிக்கப்பட்டது
வனப்பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் யானைகள் மனிதர்களுடன் இணைந்து வாழத் தொடங்கிவிட்டன. அவ்வப்போது இருவருக்கும் இடையே தலையீடுகளும் ஏற்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
அவ்வாறு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியம்பதி மலை கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்தது. வீடு ஒன்றின் கதவை துதிக்கையால் திறந்த யானை யாரையும் தாக்கவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



