காணொளி: மன அழுத்தத்தில் இருந்து விடுபட 'குழந்தைப் பருவ பழக்கத்திற்கு' திரும்பும் சீனர்கள்

காணொளி: மன அழுத்தத்தில் இருந்து விடுபட 'குழந்தைப் பருவ பழக்கத்திற்கு' திரும்பும் சீனர்கள்
பிரசுரிக்கப்பட்டது

சீனாவில் சமீப காலமாக பெரியவர்கள் பலரும் Pacifier -ஐ பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இது மன அழுத்தத்திலிருந்து ஆறுதல் அளிப்பதாகவும், குழந்தை பருவத்தில் இருந்த பாதுகாப்பு உணர்வு கிடைப்பதாகவும் இதை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.

ஒரு மாதத்தில் ஆன்லைனில் 2000 pacifierகள் விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன். இதன் விலை ரூ.120 முதல் ரூ.6 ஆயிரம் வரையில் உள்ளது.

ஆனால் இதனை பெரியவர்கள் பயன்படுத்துவதால் மன ரீதியாக எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பல் வரிசை மாறலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு