மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்

மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு ஆப்ரிக்க நாடான டோகோவைச் சேர்ந்த பெண்ணிய செயற்பாட்டாளரான எல்சா எம்பீனா பே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மாதவிடாய் நாப்கின்களை உருவாக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 60,000க்கும் அதிகமான நாப்கின்களை அவர் விற்பனை செய்துள்ளார்.

மீண்டும் பயன்படுத்தக் கூடிய நாப்கின்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாகவும், அதன் மூலம் மட்குவதற்கு 800 ஆண்டுகள்வரை எடுக்கும் மட்காத நாப்கின்கள் டன் கணக்கில் கொட்டப்படுவது தடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் எல்சா எம்பீனா பே.

மாற்று தீர்வை நாடுபவர்களுக்கு ஆரோக்கியமான மாற்று பாதுகாப்பை வழங்குவதே இந்த நாப்கின்களை உருவாக்கியதற்கான நோக்கமாகக் கூறுகிறார் எல்சா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: