You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை: மலையேற முடியாத பக்தர்களை டோலியில் சுமக்கும் தமிழர்கள்
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க ஆசை இருந்தாலும் வயோதிகம் அல்லது உடல்நிலை காரணமாக தவிப்பவர்கள் கடைசி நம்பிக்கை டோலிகள் தான்.
எவ்வித தடைகள் ஏற்பட்டாலும், பக்தர்களை சுமந்து சுமந்தே டோலிகள் சன்னிதானத்தில் சேர்த்துவிடுவார்கள்.
சன்னிதானத்தை நெருங்க நெருங்க பக்தர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கும், பக்தர்களை சுமக்கும் டோலிகளுக்கோ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ரணம். கடும் பாரம் தாங்குகிறார்கள்.
இப்படி மனிதர்களை சுமந்துச் செல்லும் டோலிகளில் பலர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தேனி, தென்காசி பகுதிகளில் இருந்து அதிகம் பேர் சபரிமலையில் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)