You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபதா 2 ராக்கெட்: பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை ஏவக்கூடிய "ஃபதா 2" ராக்கெட் சோதனையை கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பாகிஸ்தான் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
"ஃபதா 2" ராக்கெட் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பு பிரிவான ஐஎஸ்பிஆர் தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கும் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதுதான் ஃபதா 2 ராக்கெட்டின் சிறப்பம்பம். அதோடு சேர்த்து அதன் பறக்கும் திறனும் அதை வலிமைமிக்கதாக மாற்றுகிறது. இதனால் ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கும் என்றும், அதன் குறியை தவறவே விடாது என்றும் ஐஎஸ்பிஆர் கூறுகிறது.
இது ரேடாரில் தெரியாது. எனவே, அதனை அழிப்பது எதிரி நாடுகளுக்கு கடினமானதாக இருக்கும். ஃபதா 2-இன் வெற்றிகரமான சோதனைக்கு பிறகு, அது இந்திய பாதுகாப்பு ஏவுகணை திட்டத்திற்கு எதிரான வலுவான ஆயுதமாக கருதப்படுவதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஃபதா 2 ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் என்ன? பாகிஸ்தானின் இந்த வெற்றி இந்தியாவுக்கு எந்தளவு கவலை அளிக்கக்கூடியது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)