'வீடுகளே இல்லை, இடிபாடுகளை மட்டுமே பார்க்கிறோம்' காஸாவிற்கு மீண்டும் வந்த பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

'வீடுகளே இல்லை, இடிபாடுகளை மட்டுமே பார்க்கிறோம்' காஸாவிற்கு மீண்டும் வந்த பாலத்தீனர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் 15 மாதங்களுக்குப் பின் போர் சத்தம் ஓய்ந்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்கு திரும்புகின்றனர். போரால் ஏற்பட்ட சேதங்கள் அவர்களை கலங்கச் செய்கிறது.

இடிபாடுகளில் எஞ்சி இருக்கும் பொருட்களை அவர்கள் தேடுகின்றனர்.

"என் குழந்தைகள் அணிய ஆடைகள் இருக்குமா என இடிபாடுகளுக்கு அடியில் தேடுகிறேன். உடைமைகளை இடிபாடுகளில் இருந்து வெளியே இழுக்கிறோம். எங்கள் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் தெருக்களில் இருக்கிறோம். எல்லாம் எங்கள் விதி." என்கிறார் யூசுப் அல்-ஷர்காவி.

நவல் ஜானூன் காஸாவின் ரஃபா நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார். போரால் அவரது வீடு தரைமட்டமாகியுள்ளது.

அல்-மவாசியில் இடம்பெயர்ந்தோர் முகாமில் வசித்த ஹைதம் அபு, மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

"வீடுகளே இல்லை. இடிபாடுகளை மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் எங்கே வசிப்பது? எங்கே போவோம்? அல்-மவாசி முகாமுக்கே சென்றாலும் சென்றுவிடுவோம். இங்கு வாழ்வதைவிட முகாம்களில் வசிப்பதே சிறந்தது. ரஃபா முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் எங்களை அழித்துவிட்டனர்." என்கிறார் அபு.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)