You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதியோர் இல்லத்தில் வாழும் ஆதரவற்ற ஆணும் பெண்ணும் தம்பதியாக மாறிய காதல் கதை
முதியோர் இல்லத்தில் வாழும் ஆதரவற்ற ஆணும் பெண்ணும் தம்பதியாக மாறிய காதல் கதை
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் ஜானகி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 75 வயதான பாபுராவ் பாட்டீலும், 70 வயதான அனுசுயா ஷிண்டேவும் திருமணம் செய்துகொண்டனர். அனைத்து மதச்சடங்குகளையும் பின்பற்றி நடந்த இந்தத் திருமணம், இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மறக்க முடியாததாக இருந்தது. அந்த நகரம் முழுவதும் இந்தத் திருமணம் பேசுபொருளாகியுள்ளது.
இந்த மூத்த தம்பதிக்கு உறவினரோ, குடும்பமோ இல்லை. எனினும், இந்தப் புதிய உறவு அவர்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்