காணொளி: உங்கள் ஸ்மார்ட்போன் போட்டோவுக்குப் பின் உள்ள ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு; என்ன தெரியுமா?

காணொளி: உங்கள் ஸ்மார்ட்போன் போட்டோவுக்குப் பின் உள்ள ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு; என்ன தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

சார்பியல் கோட்பாட்டுக்காக நீங்கள் ஐன்ஸ்டீனை அறிந்திருக்கலாம். ஆனால், ஐன்ஸ்டீன் 1921ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது வேறொரு கண்டுபிடிப்புக்காக. ஒளியின் மிக வினோதமான நடத்தைகளில் ஒன்றான போட்டோ எலெக்ட்ரிக் எஃபெக்ட்-ஐ விளக்கியதற்காக நோபல் பரிசு பெற்றார்.

1900ஆம் ஆண்டளவில் ஜெர்மன் இயற்பியலாளர் மேக்ஸ் பிளாங்க், கதிர்வீச்சு சிறு தொகுதிகளாக பயணிக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். ஐன்ஸ்டீன் இந்த கருத்தை கொண்டு, ஒளி ஒரு அலை போலவும் ஃபோட்டான்கள் எனப்படும் சிறிய ஆற்றல் தொகுதிகளாகவும் செயல்படுகிறது என விளக்கினார்.

எலெக்ட்ரிக் எஃபெக்ட் என்பது, வெவ்வேறு அதிர்வெண்கள் மற்றும் வண்ணங்களில் வரும் ஒளி ஒரு பொருளின் மேல் படும்போது அதிலிருந்து எலக்ட்ரான்கள் விடுபட்டு மின்னோட்டம் உருவாவதாகும்.

ஸ்மார்ட்போன் கேமரா, சோலார் பேனல் போன்றவற்றுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஏன் என்பது பற்றி முழுமையான விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.