You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: நாடு திரும்பும் அகதிகள் தற்போதைய நிலை பற்றிக் கூறுவது என்ன?
சிரியாவில் பஷர் அல் அசத் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அந்நாட்டு மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப துருக்கி எல்லையில் கூடியுள்ளனர்.
"நான் சிரியாவிலிருந்து 2016ஆம் வருடம் தப்பிச்சேன். இப்போ மீண்டும் அங்க போறேன்," என்கிறார் முகமது ஜின்.
லெபனான் அகதிகள் முகாமில் உள்ள இந்த குடும்பமும் சிரியாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளது.
"நாங்கள் த்ரிபோலியில் 11 வருடமாக இருக்கிறோம். என் குழந்தைகள்ங்கஇங்குதான் வளர்ந்தார்கள்.
எனது பெண்ணுக்கு இப்போது வயது 13. மகனுக்கு வயது 12," என்கிறார் அபிர்.
"நாங்கள் நிச்சயமாகத் திரும்பிச் செல்வோம். ஆனால், எங்கள் வீடு இப்போது முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டது," என்கிறார் அபிர்.
சிரியாவுக்கு திரும்பும் பலர் தங்களோடு பல காலம் இருந்தவர்களை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)