காஸா மக்களின் பசி தீர்க்க உணவுப் பொருட்களுடன் விரையும் கிரெட்டா துன்பெர்க்

காணொளிக் குறிப்பு, பாலத்தீன குழந்தைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை எனில் அது இனவெறியே - காஸா செல்லும் கிரேட்டா கூறியது என்ன?
காஸா மக்களின் பசி தீர்க்க உணவுப் பொருட்களுடன் விரையும் கிரெட்டா துன்பெர்க்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் பஞ்சம் மற்றும் பட்டினி ஏற்பட்டுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரையும் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா துன்பர்க் மற்றும் மேலும் சில மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு ஒன்றில் காஸாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

பால், பழச்சாறு, டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், ப்ரோட்டின் பார் என்று உணவுப் பொருட்களை அந்த படகில் வைத்து அவர்கள் எடுத்துச் செல்கின்றனர். இந்த பயணமானது ஞாயிறு அன்று சிசிலியில் துவங்கியது.

பயணம் துவங்கி, இரண்டு நாட்கள் கழித்து பேசிய அவர், இஸ்ரேலின் சாத்தியமான தாக்குதலையும் யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மனிதநேய உதவிகள் பாலத்தீனர்களிடம் சேர்வதை தடுக்கும் இஸ்ரேலியப் படையின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

பிபிசியிடம் அவர் பேசியது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு