இஸ்ரேல் - பாலத்தீனம்: இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் - பாலத்தீனம்: இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்?
இஸ்ரேல் - பாலத்தீனம்: இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் பிரதமர் நரேந்திர மோதி இது ஒரு 'பயங்கரவாத' தாக்குதல் என்றும், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேல் நாட்டுடனான தனது ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு வீடியோவை ட்வீட் செய்துள்ளது. அதில் இஸ்ரேலில் இன்று என்ன நடக்கிறதோ, அதைத் தான் 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே (UPA அரசாங்கத்தின் பதவிக்காலம்) இந்தியா சந்தித்தது என்று கூறியுள்ளது.

இந்த வீடியோவில் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்குப் பிறகு, இஸ்ரேல்-பாலத்தீனம் தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)