மத்திய பிரதேசம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர் - என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, காங்கிரஸுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த வேட்பாளர்
மத்திய பிரதேசம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர் - என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் கடைசி நேரத்தில் தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை கிளப்பியிருக்கிறது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. மே 13-ம் தேதி நான்காம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள வாக்குப்பதிவில் இந்தூர் தொகுதியும் அடக்கம். நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 29-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாஜக, காங்கிரஸ், சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் இந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பு கிடைத்த, 45 வயதான அக்‌ஷய் காந்தி பாம் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக பிடிஐ செய்தி முகமையிடம் கூறினார்.

இதேபோல மத்திய பிரதேச அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கைலாஷ் விஜய்வர்கியா, அக்‌ஷய் காந்தி பாம், பா.ஜ.க-வில் இணைந்ததாக தமது எக்ஸ் பக்கத்திலும் கருத்து பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)