BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், KANNAGI TEMPLE TRUST
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், கண்ணகி கோவில்: தமிழகத்துக்கு சொந்தம் ஆனால், பராமரிப்பது கேரளா - ஏன்?, மனிதனை விஞ்சும் AI ரோபோ புதின் கையில் கிடைத்தால் என்ன நடக்கும்? பீதியை கிளப்பும் கூகுள் விஞ்ஞானி, சர்வதேச விண்வெளி நிலையம் 29000 கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்?, திருப்பதி கோவிலுக்கு போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணும் போது இதை கவனிக்க மறக்காதீங்க, ஆஸ்துமா யாருக்கெல்லாம் வரும்? குணப்படுத்த முடியாதா? மருத்துவர் தரும் எளிய விளக்கம் ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
கண்ணகி கோவில்: தமிழகத்துக்கு சொந்தம் ஆனால், பராமரிப்பது கேரளா - ஏன்
தமிழ்நாடு - கேரளா எல்யைில் உள்ள கண்ணகி கோவில், தமிழக பகுதியில் இருந்தாலும் அதன் பராமரிப்பை இன்றளவும் கேரளாவே மேற்கொண்டு வருகிறது. சேர, சோழ, பாண்டிய வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த கோவின் பின்னணி, அதை ஏன் தமிழர்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தவர்களும் வழிபடுகிறார்கள்? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மனிதனை விஞ்சும் AI ரோபோ புதின் கையில் கிடைத்தால் என்ன நடக்கும்? பீதியை கிளப்பும் கூகுள் விஞ்ஞானி

பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவின் தந்தையாகக் கருதப்படும் ஜெஃப்ரி ஹின்டன், கூகுள் நிறுவனத்தில் தாம் வகித்து வந்த பதவியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பின்னாளில் பெரும் ஆபத்துகளை விளைவிக்கும் என எச்சரித்துள்ளார். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
திருப்பதி கோவிலுக்கு போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணும் போது இதை கவனிக்க மறக்காதீங்க

TTDயின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள செயல்முறையைப் போலவே போலி இணையதளங்களிலும் நாம் பார்க்கிறோம். அவை அசல் போலவே அனைத்து அம்சங்களிலும் இருக்கின்றன. உற்று நோக்கினால் மட்டுமே அசல் எது, போலி எது என கண்டறிய முடியும். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சர்வதேச விண்வெளி நிலையம் 29000 கி.மீ. வேகத்தில் விழுந்து நொறுங்கப் போவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஆஸ்துமா யாருக்கெல்லாம் வரும்? குணப்படுத்த முடியாதா? மருத்துவர் தரும் எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல், மூச்சுக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பே ஆஸ்துமா. இது ஒரு தொற்று நோயல்ல. சிலர் தொற்று நோயான காச நோய்க்கும் (Tuberculosis), ஆஸ்துமாவுக்கும் வித்தியாசத்தை அறியாமல் இருக்கின்றனர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















