சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் - யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் - யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் - யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தினர்.

இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று பெருவாரியான வெற்றியை தர்மன் சண்முகரத்னம் பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காக் சோங் 15.7 சதவீத வாக்குகளையும் டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

ஒருவருக்கொருவர் மரியாதை என்பதைத் தனது கொள்கையாகவும் அன்னாச்சி பழத்தைத் தனது பிரசார சின்னமாகவும் கொண்டு தர்மன் இந்த தேர்தலை சந்தித்தார்.

அன்னாசி பழத்தை சின்னமாகக் கொண்டிருப்பது குறித்து அவர் கூறும்போது, அன்னாசி பழம் மிகவும் சுவையானது, அனைவராலும் விரும்பப்படுவது. மலாய் பண்டிகைகளின்போதும், மற்ற எல்லா விழாக்களிலும், எளிமையான அன்னாசிப்பழ பச்சடியைவிட சிங்கப்பூரில் ஒன்றுபட வைப்பது எது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: