தென்கொரியாவின் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? - வீடியோ

காணொளிக் குறிப்பு, தென்கொரியாவின் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? - வீடியோ
தென்கொரியாவின் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 2004ஆம் ஆண்டு தென் கொரியாவில் பாலியல் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது. அதன்பின் பல ஆண்டுகளாக அவர்கள் மறைவாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது தென் கொரிய அரசாங்கம் பாலியல் தொழில் நடக்கும் இடங்களை மூட நினைக்கிறது.

அதற்காக அரசு அவ்விடத்தில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுகிறது.

இதை எதிர்த்து அங்கிருக்கும் பெண் பாலியல் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள்.

அரசாங்கம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகவும், இரண்டு வருடங்களுக்கு மாதம் 1,000 டாலர்கள் வழங்குவதாகவும் கூறியிருக்கிறது.

ஆனால் அதற்கு அப்பெண்கள் ‘பாலிலுயல் தொழிலில் ஈடுபட மாட்டோம்’ என்று ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும்.

அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களோ, தங்களுக்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக் கூறுகிறார்கள்.

தென் கொரியா, பாலியல் தொழில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: