மாற்றுத்திறனாளி கணவரை சர்வதேச விளையாட்டு வீரராக மாற்றிய மனைவி – காணொளி

காணொளிக் குறிப்பு, மாற்றுத்திறனாளி கணவரை சர்வதேச விளையாட்டு வீரராக மாற்றிய மனைவி
மாற்றுத்திறனாளி கணவரை சர்வதேச விளையாட்டு வீரராக மாற்றிய மனைவி – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஹரியானா மாநிலத்தின் ரோதக் நகரத்தைச் சேர்ந்தவர் குஸும். இவருக்குத் திருமணமாகி இரண்டரை மாதங்களிலேயே, அவரது கணவர் மஞ்ஜித் அஹ்லாவத் ஒரு சாலை விபத்தில் சிக்கி நடக்கும் திறனை இழந்தார்.

மஞ்ஜிதின் நிலைமையைப் பார்த்து, குஸுமின் குடும்பத்தினரும் உறவினர்களும், அவரை விட்டுவிட்டு வேறொருவரோடு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கச் சொல்லி வற்புறுத்தினர். ஆனால், அவர் தன் கணவரை ஆதரிக்க முடிவெடுத்தார்.

விபத்துக்குப்பின் விரக்தியில் சோர்ந்திருந்த இருந்த மஞ்ஜித்தின் வாழ்வில் உத்வேகத்தை ஊட்டினார் குஸும். அதைத்தொடர்ந்து மஞ்ஜித் பாரா தடகளப் போடிகளுக்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளத் துவங்கினார். பல தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்குச் சென்று பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இப்போது, அக்டோபர் மாதம் நிகழவிருக்கும் ஆசிய தடகளப் போட்டிகளுக்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டு, தடகளம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: