சைக்கிள் போலோவில் சாதிக்கும் தமிழ்நாட்டின் வீராங்கனைகள்
சைக்கிள் போலோ என்கிற வெளியில் பெரிதும் அறியப்படாத சவாலான விளையாட்டில் கோவை மாவட்ட அணியினர் சாதித்து வருகின்றனர்.
குதிரை போலோ என்கிற விளையாட்டை அடிப்படையாக வைத்து குதிரைக்குப் பதிலாக சைக்கிள் வைத்து விளையாடப்படுவது தான் இந்த சைக்கிள் போலோ.
இந்த விளையாட்டு சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என்கிற பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டு அளவில் கோவை மாவட்ட அணியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பிடித்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றனர்.
அரசு கல்லூரி மாணவியான சத்யாவை போன்ற பலருக்கும் சைக்கிள் போலோவில் சாதிக்க வேண்டும் என்பது கனவாக மட்டுமில்லாமல் பல்வேறு கனவுகளைத் திறக்கும் கருவியாகவும் இருந்து வருகிறது.
இந்திய அணிக்கும் கோவையிலிருந்து வீராங்கனைகள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார் பயிற்சியாளர் அருண் கோபால். சைக்கிள் போலோ விளையாட்டிற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்துள்ளார்.
தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு : மதன் பிரசாத்
படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



