You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் - 8 பேர் மரணம்
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், அங்கு ஷாப்பிங் செய்துகொண்டிருந்த எட்டு பேரை சுட்டுக் கொன்றதாக அவசர சேவைகள் கூறுகின்றன.
ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதை நேரில் பார்த்தவர்கள் விவரித்ததால், வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அந்த நபரை சுட்டுக் கொன்றதாகவும், அவர் தனியாக செயல்பட்டதாக நம்புவதாகவும் போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் சிலர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூன்று பேர் மோசமான நிலையில் உள்ளனர்.
துப்பாக்கி ஏந்தியிருந்தவர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்