வெள்ளத்தில் கைக் குழந்தையுடன் மின்சாரம், குடிநீர் இன்றித் தவிக்கும் குடும்பம்

வெள்ளத்தில் கைக் குழந்தையுடன் மின்சாரம், குடிநீர் இன்றித் தவிக்கும் குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

இரண்டு மாத கைக்குழந்தையுடன் மூன்று நாட்களாக மின்சாரம், குடிநீர் இல்லாமல், வெள்ள நீரும் முழுமையாக வடியாமல் முதல் மாடியில் தவித்து வருகின்றனர் முடிச்சூர் சாலை அருகே ஒரு குடும்பத்தினர்.

பதினைந்து பேர் கொண்ட அந்தக் குடும்பம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பேரூராட்சிப் பகுதியில் குட்வில் நகரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

அடையாற்றின் தொடக்கப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பெருங்களத்தூர் பேரூராட்சிப் பகுதிகள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ள நீரால் சூழ்ந்து வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகள் காரணமாகக் கடந்த எட்டு ஆண்டுகளாக வெள்ளம் ஏற்படவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)