You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜஸ்தான் இனிப்பு தமிழ்நாட்டின் இருட்டுக்கடை அல்வா ஆனது எப்படி?
தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு இனிப்பு என அல்வாவை கூறலாம். அல்வா என்றவுடன் சட்டென்று நினைவுக்கு திருநெல்வேலி தான்.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா என்றால் உலகப் பிரசித்தம், அதுவும் அல்வாவை கண்டுபிடித்தவர் ஒரு திருநெல்வேலிக்காரர் என்று கூட பலர் நினைக்கலாம். அத்தகைய பெருமை வாய்ந்த இருட்டுக்கடை அல்வாவின் பூர்வீகம், தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி எனும் ஒரு சிறிய ஊர்.
“வடஇந்தியாவில் பொதுவாகவே அல்வா மற்றும் இனிப்பு வகைகளை மக்கள் விரும்பி உண்பார்கள். ஆனால் அங்கு பெரும்பாலும் செய்யப்பட்டவை, கேரட் அல்வா, பாதாம் அல்வா, ரவை அல்வா போன்றவை தான். கோதுமையிலிருந்து பால் எடுத்து சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் அல்வாவை தயாரித்து அதை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தது எங்கள் லாலா பரம்பரை தான்” எனக் கூறுகிறார் ஷியாம் சுந்தர் சிங்.
சொக்கம்பட்டியின், அரண்மனைத் தெருவில் வசித்து வரும் ஷியாம் சுந்தர் சிங், லாலா குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர். 300 ஆண்டுகளாக இவர்கள் குடும்பம் அல்வா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இன்றும் தனது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பரிய முறையில் அல்வா தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 40 வருடங்களாக அல்வா மற்றும் பால்கோவா வகைகளை தென்காசி, அம்பாசமுத்திரம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்வதோடு, வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்