தமிழ்நாட்டின் கோவில் நிர்வாகம் பற்றி தெலுங்கானாவில் பிரதமர் மோதி பேசியது ஏன்?
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில் பிரதமர் மோதி தமிழ்நாடு அரசு மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க.வின் இந்துத்வா அரசியலுக்கு எதிராக சாதியை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கையில் எடுப்பதற்கான சமிக்ஞைகள் தென்படும் நிலையில், பிரதமர் மோதியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? அது குறித்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார்? பிரதமர் மோதியின் பேச்சுகளும், அவரது நோக்கமும் எத்தகையது? காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



