மகளிர் டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறிய இந்தியா - தலைகீழாகிப் போன முடிவு (காணொளி)

காணொளிக் குறிப்பு, ரன் அவுட்டால் தலைகீழாக மாறிய முடிவு: மகளிர் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய இந்தியா
மகளிர் டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறிய இந்தியா - தலைகீழாகிப் போன முடிவு (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

2019 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் தோனியின் ரன் அவுட் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதேபாணியில் ஒரு முடிவு, மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நடந்துள்ளது.

இந்த முறையும் இந்திய மகளிர் அணியின் உலக கோப்பை கனவு நிறைவேறவில்லை. விறுவிறுப்பான போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் ஆவுட் ஆனது ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியுள்ளது. ’ ரன் அவுட் ஆகி வெளியேறும்போது மட்டையைத் தூக்கி எறிந்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார் ஹர்மன்ப்ரீத் கவுர். இது அவரது வாழ்நாளில் மிகவும் மோசமான நாள்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.

தன் மீதே அவர் கோபம் கொள்ள நேர்ந்தது. “இதைவிட துரதிருஷ்டசாலிகளாக நாங்கள் இருக்க முடியாது” என ஹர்மன்ப்ரீத் சிங் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார். தேவையே இல்லாமல் தாம் ரன் அவுட் ஆன விதத்தைத்தான் அவர் ‘கெடுவாய்ப்பு’ என்ற வகையில் பேசினார். நேற்றைய ஆட்டத்தில் என்னதான் நடந்தது என்பதை மேலே உள்ள காணொளியில் பார்க்கலாம்.

மகளிர் உலகக் கோப்பை: ரன் அவுட்டால் தலைகீழாக மாறிய முடிவு

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: