You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஏவுகணையால் தாக்கப்பட்ட இரான் விளையாட்டு அரங்கம்
இரானுடனான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போரின் முதல் நாளில் இரானின் விளையாட்டு அரங்கம் ஒன்று தாக்கப்பட்டதை பிபிசி ஆய்வு காட்டுகிறது
நடுவானில் ஏவுகணை ஒன்று வெடித்து இரானின் விளையாட்டு அரங்கத்தை தாக்குவதை இந்த காணொளி காட்டுகிறது.
இந்தப் பகுதியில் 300 மீட்டருக்கும் குறைவான இடைவெளி தூரத்தில், அடுத்தடுத்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாக இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடந்த சமயத்தில் மாணவர்கள் அந்த விளையாட்டு அரங்கிற்குள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிபிசி ஆய்வின்படி, அந்த விளையாட்டு அரங்கம் இரானிய புரட்சிகர காவல் படையின் தளத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஆனால் இந்த கட்டிடம் அதன் ஒரு பகுதி அல்ல.
இரானிய புரட்சிகர காவல் படையின் தளம் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தளத்திற்கு எந்தவொரு சேதமும் ஏற்பட்டவில்லை என்பதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்திடம் கேட்கப்பட்டது, ஆனால் இதுவரை இருநாடுகளும் பதிலளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு