You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பயமில்லை, காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது' - வயநாட்டில் தமிழக செவிலியரின் துணிச்சல்
இவர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனா. கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, சபீனா ஜிப்லைனில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தார். அவருடைய இந்த செயலை பாராட்டி இவருக்கு தமிழ்நாடு அரசு சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தது.
ஜூலை 29 அன்று கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டகை எனும் இரண்டு கிராமஙகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இரு கிராமங்களையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது மீட்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க தடங்கல்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக, சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு அந்தப் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, முண்டகைக்குச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தாமதமானது. எனவே, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் சூரல்மலையில் இருந்து ஜிப்லைன் அமைத்து அதன் வாயிலாக முண்டகைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டியிருந்தது.
இப்படி ஜிப்லைன் வாயிலாக முண்டக்கைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்திருக்கிறார் செவிலியர் சபீனா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)