You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழைய இரும்புக் கடைக்காரருக்கு லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசு - மனைவியே காரணம் என நெகிழ்ச்சி
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரத்தில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ப்ரீதம் லாலுக்கு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி செய்தித்தாள் நல்ல செய்தியைக் கொண்டுவந்தது.
கடந்த 50 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கிவரும் அவருக்கு இப்போது பஞ்சாப் ஸ்டேட் லாட்டரியில் இரண்டரை கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.
ரக்ஷா பந்தன் தினத்துக்கான பம்பர் லாட்டரியில் அவருக்கு இந்தப் பரிசு விழுந்திருக்கிறது.
தனது கடைக்கு இரண்டு பேர் வந்து லாட்டரி டிக்கெட் விற்றதாகவும் ஆனால் அதன் விலை 500 ரூபாய் எனபதாலும், அன்று கடையில் சரியாக வியாபாரம் இல்லாததாலும், அவர் வாங்க மறுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
“அவர்கள் மறுபடியும் வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ‘இதுதான் கடைசி டிக்கெட், யாருக்குத் தெரியும், உங்களுக்குப் பரிசு விழலாம்' என்று சொன்னார்கள்,” என்கிறார்.
பக்கத்தில் இருந்த அவரது மனைவியும் வாங்கச் சொல்லவே தான் அந்த டிக்கெட்டை வாங்கியதாகச் சொல்கிறார்.
லாட்டரி டிக்கெட்களின் விலை வெறும் ஒரு ரூபாயாக இருந்ததில் இருந்து ப்ரீதம் லால் அவற்றை வாங்கி வருகிறார். இன்று ஒரு லாட்டரி டிக்கெட்டின் விலை 500 ரூபாய்.
ப்ரீதம் லாலுக்கு மகள்கள் உள்ளனர், பரிசுத் தொகையைத் தனது மகள்களுக்காகவும், சமூக சேவைகளுக்காகவும் செலவு செலவு செய்ய விரும்புகிறார்.
“இந்தப் பரிசுப் பணத்தில் கால் பகுதியை ஏழைகள், வசதியில்லாதவர்கள், பசுக்கள் ஆகியவர்களுக்குச் செலவு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தையல் மெஷின் வாங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்போம். மீதி முக்கால் பங்கு பணத்தை குடும்பச் செலவுக்குப் பயன்படுத்த முடிவு செய்திருக்கோம்,” என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)