காணொளி: பஞ்சாபில் கனமழையால் இடிந்து விழுந்த வீடு

காணொளி: பஞ்சாபில் கனமழையால் இடிந்து விழுந்த வீடு
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபில் பதான்கோட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஓடை ஒன்றின் அருகே கட்டப்பட்டிருந்த வீடு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

ஜலந்தர் - பதான்கோட் நெடுஞ்சாசலை அருகே வெள்ளம் காரணமாக பயன்பாட்டில் இல்லாத பழைய பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

அதேபோல, சக்கி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பதான்கோட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பாலத்தின் மீது போகும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு