கோவை: மேம்பாலத்தில் 18 டன் டேங்கர் கவிழ்ந்தது எப்படி? என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
கோவை: மேம்பாலத்தில் 18 டன் டேங்கர் கவிழ்ந்தது எப்படி? என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

கொச்சியில் இருந்து கோவையில் உள்ள குடோனுக்கு வந்த 18 டன் எரிவாயு டேங்கர் லாரி உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தால் எரிவாயு கசிய தொடங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் கொடுத்த தகவலில் அடிப்படையில் விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்த டேங்கர் லாரியில் உள்ள 18 டன் எரிவாயு பீளமேடு பகுதியில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

பத்து மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, எரிவாயு டேங்கர் லாரியுடன் இணைக்கும் பணி முடிந்த நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)