லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன?

லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹெஸ்பொலா மீதான தாக்குதலால் இஸ்ரேல் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வாக்கி-டாக்கி மற்றும் பேஜர் வெடிப்பில் தொடங்கிய இத்தாக்குதல், தற்போது தீவிரமான வான்வழித் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் அதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று (செப்டம்பர் 23) நடந்தது மிகப்பெரிய சாதனை. ஹெஸ்பொலா உருவானதிலிருந்து இந்த வாரம் அதற்கு மிக மோசமான வாரமாக அமைந்தது. அதையே இந்தத் தாக்குதலின் முடிவுகள் உணர்த்துகின்றன,” என்றார்.

இந்நிலையில், செப்டம்பர் 23ம் தேதி அன்று இஸ்ரேலியத் தாக்குதல்களில் 50 குழந்தைகள் உட்பட 550 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2006-இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஒரு மாதமாக நீடித்த போரில் லெபனானில் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.

லெபனானை மற்றொரு காஸாவாக மாற்றுகிறதா இஸ்ரேல்? விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)