ரஹானேவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விஸ்வரூபம் எடுத்துள்ள ரஹானேவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்கான கதவுகள் திறந்துள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதுவும் நேரடியாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் தற்போது அஜிங்கிய ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2022 ஜனவரியில் தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் தொடராகும். கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
2020-ம் ஆண்டு இறுதியில் மெல்பர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் சதமடித்ததே, தற்போது வரை அவரது கடைசி டெஸ்ட் சதமாகும். அதன் பின்னர் அவர் விளையாடிய 15 டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் ஏதும் எடுக்கவில்லை. தவிர மூன்று அரை சதம் மட்டுமே விளாசியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



