ஸ்ரீவைகுண்டம்: வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஸ்ரீவைகுண்டம்: வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது

தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களைத் தவிர பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையை புரட்டிப் போட்டது மிக்ஜாம் புயல் கனமழை. தற்போது வடகிழக்குப் பருவமழை தென் மாவட்டங்களை அச்சுறுத்தியுள்ளது. 

தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணல்காடு, அகரம் கிராம மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக வீட்டின் மாடியில் தஞ்சம் அடைந்திருந்த நிறைமாத கர்ப்பிணி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி அவதிப்பட்டதாக, அவரது தாய் கூறினார்.

வெள்ளத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. 

நாகர்கோவிலில் சக்தி கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. 

திருப்பூர் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், இன்று வெள்ளம் சற்று தணிந்துள்ளது. 

சில குடியிருப்புப் பகுதிகளில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். 

நெல்லை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் ஒரு உடலை மீட்டுள்ளனர். அவரது அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. 

பெருமழையால் நெல்லையில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)