You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
24 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்: கொண்டாடிய இஸ்ரேல்
இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு 13 இஸ்ரேலியர்கள் உட்பட 24 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர்.
நான்கு நாட்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும் 150 பாலத்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்தது. சிறையில் இருந்த பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் வெள்ளிக்கிழமை வடக்கு இஸ்ரேலில் உள்ள இரண்டு சிறைகளில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் ராணுவ நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)