விராட் கோலியின் தொடர் அதிர்ச்சியால் கலக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரோகித் என்ன செய்வார்?

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

இன்றைய இரண்டாவது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

2008ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றன. பெங்களூரு மும்பை அணிகள் இதுவரை 30 முறை மோதியுள்ளன. அதில் 17 முறை மும்பை வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 13 முறை வென்றுள்ளது.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒருமுறைகூட ஐபிஎல் தொடரைக் கைப்பற்றாத பெங்களூரு அணியும் மோதுவது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பந்துவீச்சைத் தேர்வு செய்த பெங்களூரு அணிக்காக முதல் ஓவரை வீச வந்தார் முகமது சிராஜ். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மாவும் இஷான் கிஷானும் களமிறங்கினார்கள்.

முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் மும்பை அணியால் இரண்டு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், ரீஸ் டோப்லே வீசிய இரண்டாவது ஓவரில் இஷான் கிஷான் இரண்டு முறை பவுண்டரிக்கு பந்தை அடித்து நம்பிக்கையளித்தார்.

மீண்டும் மூன்றாவது ஓவரை வீசுவதற்குத் திரும்பி வந்த முகமது சிராஜ், அவர் எதற்காகக் காத்துக் கொண்டிருந்தாரோ அந்த வேலையைச் செய்துமுடித்தார். இரண்டாவது ஓவரில் பந்துகளை பவுண்டரிக்கு தட்டிவிட்டுக்கொண்டிருந்த இஷான் கிஷானை அவுட்டாக்கி, பெங்களூரு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.

கூடவே ரோகித் ஷர்மாவையும் வெளியேற்ற முயன்று ஸ்டம்பை குறிபார்த்து சிராஜ் வீசினார். ஆனால், ரோகித் அதற்கு அனுமதிக்கவில்லை. இஷான் கிஷான் அவுட்டானதை தொடர்ந்து களத்திற்கு வந்த கேமரூன் கிரீன், அடுத்த ஓவரிலேயே டோப்லேவின் பந்துவீச்சில் அவுட்டாகி 5 ரன்களோடு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ்.

அந்த அதிர்ச்சி விலகுவதற்கும் முன்பாகவே, ஆறாவது ஓவரில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ரோகித் கேட்ச் அவுட்டானார். இஷான் கிஷான் 13 பந்துகளில் 10 ரன்களோடு, கேமரூன் கிரீன் 4 பந்துகளில் 5 ரன்களோடு, ரோகித் ஷர்மா 10 பந்துகளில் ஒரேயொரு ரன்னோடு என்று மூன்று பேர் வெளியேறினார்கள்.

பவர் பிளே முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரோகித் வெளியேறியதைத் தொடர்ந்து திலக் வர்மா சூர்யகுமாருடன் கூட்டணி சேர்ந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், IPL/Twitter

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சிராஜுக்கு பதிலாகப் பந்து வீச வந்த ஹர்ஷல் பட்டேல் வீசிய ஓவரில் திலக் வர்மா ஒரு ஃபோர் அடித்து நம்பிக்கையூட்டினார். ஆனால், 9வது ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்த சூர்யகுமாரை அடுத்த பந்திலேயே ஷபாஸ் அகமது கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். 10 ஓவர் முடிவில் மும்பை 4 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை எடுத்திருந்தது.

அதற்கு அடுத்து வந்த மூன்று ஓவர்களிலுமே திலக் வர்மாவும் நேஹல் வதேராவும் கூட்டணி சேர்ந்து ஆடினர். திலக் தொடர்ச்சியாக, பிரேஸ்வெல், கிளென் மேக்ஸ்வெல், ஆகாஷ் தீப் ஆகியோரின் ஓவர்களில் ஃபோர், சிக்ஸ், ஃபோர் என்று வெளுத்தார்.

ஐந்து முறை ஐபிஎல் தொடரைக் கைப்பற்றியிருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறைகூட முதல் போட்டியை வென்றதில்லை. இந்த முறையாவது அந்தப் பாரம்பர்யத்தை உடைத்து முதல் போட்டியில் வெற்றி பெறுவார்களா என்ற கேள்வி எழுகிறது.

திலக் வர்மா சாமர்த்தியமாக விளையாடிக் கொண்டிருந்தது, இந்த முறையேனும் முதல் போட்டியை வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை துளிர்விட வழிவகுத்தது.

வதேராவும் உடன் சேர்ந்து பந்துகளைப் பறக்கவிட்டார். 14வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அந்த ஓவரில் அபாரமான ஒரு சிக்ஸ் அடித்தார் வதேரா. 117 மீட்டர் தொலைவுக்கு மிக நீண்ட சிக்ஸரை அடித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஆனால், அதற்கு அடுத்த பந்தையும் அதே வேகத்தோடு அவர் அடித்தது, அவசரப்பட்டுவிட்டாரோ என்ற கேள்வியை ஏற்படுத்தியது. அதற்கேற்ப அந்தப் பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி, அடுத்தடுத்து சிக்ஸ் மும்பை ரசிகர்களை அடித்து மகிழ்வித்த வதேராவை அவுட்டாக்கி 14வது ஓவரில் வெளியேற்றினார். 15 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்திருந்தது.

சிராஜ், டோப்லே போன்ற பவுலர்கள் நன்றாகச் செயல்பட்டு ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆர்சிபி அணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

கடைசி ஐந்து ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில், திலக் வர்மா, டிம் டேவிட் கூட்டணி களத்தில் இருந்தது. திலக் வர்மா தனி ஆளாக மும்பை அணிக்கான ரன் ஸ்கோரராக நின்றுகொண்டிருந்தார். டிம் டேவிட்டும் அடிக்கத் தொடங்கியிருந்தால், இருவரது கூட்டணியும் கடைசி 5 ஓவர்களில் குறிப்பிடத்தக்க ரன்களைக் குவித்திருக்க முடியும்.

ஆனால், டிம் டேவிட் வந்தவுடன் லெக் ஸ்பின்னில் சிரமப்படுவார் என்பதை உணர்ந்து கரண் ஷர்மாவுக்கு மீண்டுமொரு ஓவரை கொடுத்து பெங்களூரு கேப்டன் சரியான முடிவை எடுத்திருந்தார். ஆரம்பத்தில் சில பந்துகளைக் கடந்துவிட்டால் அவரால் ரன்களைக் குவித்திருக்க முடியும். ஆனால், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் கரண் ஷர்மா.

இதற்கிடையே பெங்களூருவின் மிக முக்கியமான பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லே, ஃபீல்டிங்கின்போது தோளில் ஏற்பட்ட காயத்தால் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், IPL 2023

ரீஸ் டாப்லிக்கு சரிநிகராக யார் பந்து வீசுவார் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, 17வது ஓவரின் தொடக்கத்திலேயே, ஆகாஷ் தீப் பந்தில் சிக்ஸ் அடித்து, திலக் வர்மா தனது மூன்றாவது ஐபிஎல் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு அதே ஓவரில் மீண்டுமொரு ஃபோர் அடித்து களத்தில் தனது நிலையை மீண்டும் உறுதி செய்தார்.

ஆனால், 17 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. பெங்களூரு அணி அபாரமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸி அற்புதமான ஒரு கேட்ச் மூலம், வயதானாலும் தனது உடல் உறுதியும் திறமையும் குறைந்துவிடவில்லை என்பதைக் காட்டினார். ரித்திக் ஷொகீன் 5 ரன்களில் வெளியேற வழிவகுத்த அந்த கேட்ச் எளிமையானதல்ல. மிக மிகக் கடினமான கேட்ச் வாய்ப்பை ஓடிச் சென்று, தாவிப் பிடித்து மும்பையின் 7வது விக்கெட்டை கைப்பற்றினார்.

திலக் வர்மாவுடன் அடுத்ததாக கூட்டணி சேர்ந்தார் அர்ஷத் கான். டுப்ளெஸ்ஸி, விராட் கோலி இருவரது ஃபீல்டிங்கும் இன்று மிகச் சிறப்பாக இருந்தது. ஆர்சிபியின் ஒவ்வொரு வீரர் வெளிப்படுத்திய திறன், இந்தத் தொடரில் முத்திரை பதித்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் இருப்பதைப் போல் இருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

கடைசி பத்து பந்துகள் பாக்கியிருந்த நிலையில் திலக் வர்மாவும் அர்ஷாத்தும் களத்தில் இருந்தனர். திலக் எப்படியாவது 150 ரன்களைக் கடக்க உதவுவார் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

பெங்களூரு அணியும் அதற்கு விட்டுவிடக் கூடாது என்பதைப் போல் ஃபீல்டிங் நிலைகளை மாற்றியமைத்து உறுதிபூண்டு நின்றது. ஆனால் 19வது ஓவரை வீசிய சிராஜ் தொடர்ச்சியாக நான்கு வைட் பால்களை வீசினார்.

இதனால் இரண்டே பந்துகளில் மும்பைக்கு ஐந்து ரன்கள் கிடைத்தன. முகமது சிராஜ் 19வது ஓவரில் மட்டும் மொத்த ஐந்து வைட் பால்களை வீசினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 16 ரன்களை கொடுத்தார் முகமது சிராஜ்.

20வது ஓவரில் அர்ஷத் கான் 87 மீட்டர் தொலைவுக்கு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் அபார சிக்ஸ் ஒன்றை அடித்தார். கடைசி ஓவரில் நான்கே பந்துகளில் 13 ரன்களை குவித்தது மும்பை. திலக் வர்மா தனது பங்குக்கு கடைசி ஓவரில் எதிர்கொண்ட ஒரு பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார்.

இறுதி ஓவரின் கடைசி பந்தில் மிக அற்புதமாக பந்தைப் பறக்கவிட்டு ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்தார் திலக் வர்மா. மும்பை இந்தியன்ஸ் அணி 171 ரன்களை எடுத்துள்ளது என்றால், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்ற திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்களைக் குவித்து அதற்கான முழுமுதற் காரணமாகத் திகழ்கிறார் திலக் வர்மா.

20வது ஓவர் வரைக்கும் முழு திறனையும் வெளிப்படுத்தினால் நிச்சயம் ஸ்கோர் செய்ய முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் திலக் வர்மா.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

அதிரடி காட்டும் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி

172 ரன் என்ற இலக்கோடு பேட்டிங்கை தொடங்கியது பெங்களூரு அணி. கேப்டன் டுப்ளெஸ்ஸி, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.

மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக ஜேசன் பெரென்டிரோஃப் களமிறக்கப்பட்டார். முதல் ஓவரை நிதானமாக இருவருமே சிங்கிள்ஸ் எடுத்தபடி எதிர்கொண்டார்கள்.

இடது கை பந்துவீச்சாளரான அர்ஷாத் கான் இரண்டாவது ஓவரை வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்தை கோலி பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அந்த ஒரு ஓவரில் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி 9 ரன்களை எடுத்தது.

அதுவரை நிதானமாக நின்றுகொண்டிருந்த டுப்ளெஸ்ஸி, மூன்றாவது ஓவர் தொடங்கியதும் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் என அதிரடியாக இறங்கி ஆடத் தொடங்கினார்.

தனது பங்குக்கு விராட் கோலியும் அதற்கு அடுத்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் என்று அவரை நோக்கி ஜோஃப்ரா ஆர்ச்செர் வீசிய பந்துகளைப் பறக்கவிட்டார். ஜோஃப்ரா ஆர்ச்செரை நிலைகொள்ளவிடாமல் விராட் கோலி தொடர்ச்சியாக பந்துகளை விளாசிக் கொண்டேயிருந்தார்.

பவர் பிளே முடிவில் விராட் கோலி நான்கு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். டுப்ளெஸ்ஸி தனது பங்குக்கு இரண்டு ஃபோர் ஒரு சிக்ஸ் அடித்தார். ஆறாவது ஓவர் முடிவில் பெங்களூரு 53 ரன்களைக் குவித்திருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

டுப்ளெஸ்ஸி அடித்து விளாசிக் கொண்டிருந்தார். பந்துகள் அடுத்தடுத்து சிக்ஸருக்கு பறந்தன. மிகச் சாமர்த்தியமாக விளையாடியவர் வீசப்படும் பந்தைக் கணக்கிட்டு விளையாடினார். பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி 97 ரன்களை எடுத்திருந்தது.

பத்து ஓவர் முடிவில் டுப்ளெஸ்ஸி மொத்தம் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். விராட் கோலி ஒரு சிக்ஸ், நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார். டுப்ளெஸ்ஸி மிகக் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டலாக களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

11வது ஓவரில் மீண்டுமொரு சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார் விராட் கோலி. ஆட்டம் செல்லும் போக்கைப் பார்த்தால் விக்கெட் ஏதும் இழக்காமல் கோலியும் டுப்ளெஸ்ஸியுமே வெற்றியை ருசித்துவிடுவார்களோ என்பதைப் போல் இருந்தது.

இருவரும் சேர்ந்து இந்த ஐபிஎல் தொடரின் முதல் 100 ரன் எடுத்த கூட்டணியாக களத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தார்கள். 11வது ஓவர் முடிவில் விராட் கோலி அடித்த சிக்ஸரோடு சேர்த்து மொத்தம் 11 ரன்களை எடுத்து பியூஷ் சாவ்லாவின் பந்துவீச்சை துவம்சம் செய்திருந்தனர்.

அடுத்த ஓவரை வீச வந்த ஆர்ச்செர் மீது அழுத்தம் அதிகமாக இருந்தது. அவருடைய பந்துவீச்சில், இந்த ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆனார் விராட் கோலி. 38 பந்துகளில் 50 ரன்களை எடுத்து முடித்தார்.

களத்தில் அவுட் ஆகாமல் நின்ற தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே தனித்தனியாக அரை சதங்களை அடித்திருந்தனர். கூட்டணியாக 100 ரன்களைக் கடந்திருந்தனர். 12 ஓவர் முடிவுக்கு பெங்களூரு அணி 113 ரன்களை எடுத்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: