You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் காலமானார்
பிரசுரிக்கப்பட்டது
பிரபல தொலைக்காட்சி தொடரான 'எதிர்நீச்சல்'-ல் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து காலமானார். நடிகரும் இயக்குனருமான அவர், ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 57 ஆகும். சென்னை வளசரவாக்கத்தில் டப்பிங் முடித்து வீடு திரும்பும் போது திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரைத்துறையை சேர்ந்த பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்