You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் மனிதாபிமானப் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதா? - காணொளி
இந்தக் காட்சிகள் ரஃபாவின் வடமேற்கு பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பதிவு செய்யப்பட்டவை.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்கின்றனர். தீவிர காயங்களுடன் மக்கள் இருப்பதையும் சிலர் தரையில் அசைவின்றி கிடப்பதையும் இந்த காணொளியில் காணலாம்.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், 64 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இந்த வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில், இதில், குண்டு வெடிப்பினால் ஏற்படும் பள்ளத்தைக் காண முடியவில்லை. ஆனால், நமக்குத் தெரிந்தவரை இந்தச் சம்பவம் காஸா மனிதாபிமான மண்டலத்திலிருந்து தெற்கே 1கி.மீ தொலைவில் நடந்துள்ளது.
முழு விவரங்களைக் காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)