You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் 10% பணக்காரர்களிடம் 64% செல்வம் - இவர்களுக்கு ‘செல்வ வரி’ விதிக்க முடியுமா? - காணொளி
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தா சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்து வழங்குவோம்'னு பிரதமர் நரேந்திர மோதி தொடர்ச்சியாக கூறிவந்தார். ஆனால், அது நடக்கவில்லை.
எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் மோதி அரசை தொடர்ச்சியாக கிண்டல் அடித்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. செல்வச் சமத்துவமின்மை - அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்... ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். இத்தகைய சூழலில் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டுமா என்ற விவாதம் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது.
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கவேண்டும் என்ற வாதம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் உள்ளது. உலகில் உள்ள 3,000 பில்லியனர்கள் 2% செல்வ வரியை செலுத்தினாலே வறுமையையும் சமத்துவமின்மையையும் குறைத்துவிடலாம் என்றும் காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியை பெற முடியும் என்றும் ஜெர்மனி, பிரேசில், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் கூறுகின்றன.
சமீபத்தில் இந்தியாவில், நடந்துமுடிந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக Inheritance Tax அதாவது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிப்பது பற்றி அதிகம் பேசப்பட்டது. தற்போது தேர்தலுக்கு பின்பு, Wealth Tax அதாவது செல்வ வரி பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒருவரிடம் உள்ள செல்வத்துக்கு ஆண்டு வரி விதிப்பதுதான் செல்வ வரி எனப்படுகிறது. சரி, பணக்காரர்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க முடியுமா ?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)