You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு: நாமக்கல் வெப்படையில் என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் யார்? பின்னணி என்ன?
நாமக்கல்லில் இன்று போலீசார் என்கவுன்டர் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார் என தமிழ்நாடு காவல்துறை தெரிவிதித்துள்ளது.
இன்று ஒரு லாரியை நாமக்கல் போலீசார் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. அந்த லாரிக்குள் இருந்தவர்கள் கேரளாவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட குழு என போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கண்டெயினர் லாரி ஒன்றில் தப்பியதாக நாமக்கல் காவல்துறைக்கு தகவல் கிடைக்கவே, இன்று செப்டம்பர் 27, காலை வாகன சோதனையில் ஒரு கண்டெயினர் லாரி நிற்காமல் சென்றதையடுத்து, அவர்களை போலீசார் துரத்திப் பிடித்தோம் என்றும், ஓட்டுநர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதாகவும் சேலம் சரக டிஐஜி உமா கூறினார்.
கைதான ஆறு பேரும் ஹரியானா மாநிலம் பல்வால் மற்றும் நு (Nuh) மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் கூகிள் மேப்பில் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களாக பார்த்து கேஸ் கட்டிங் உபகரணத்தைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டெயினர் லாரிக்குள் இருந்து கார் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)