இலங்கை: ஒரே நேரத்தில் 11 ஓவியங்களை வரைந்து 22 வயது இளைஞர் சாதனை

இலங்கை: ஒரே நேரத்தில் 11 ஓவியங்களை வரைந்து 22 வயது இளைஞர் சாதனை
பிரசுரிக்கப்பட்டது

ஷம்மிக்க ஹிமேஷ் இளங்கரத்ன, 22 வயது இளம் ஓவியரான இவர் இலங்கையின், கொழும்பிற்கு அருகே வசிக்கிறார். இவர் ஒரே சமயத்தில் 11 ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. 11 பிரபலமான கிரிக்கெட் வீரர்களின் ஓவியங்கள் அவை. கைகள் மட்டுமல்லாது, கால்கள் மற்றும் நாக்கைப் பயன்படுத்தியும் ஓவியங்கள் வரைகிறார் அவர்.

கார்கள் மற்றும் இயந்திரவியல் தொடர்பாகவும் பயிற்சி எடுத்து வரும் இவர், ஓவியங்களை விற்று கிடைக்கும் பணத்தில் படித்து வருகிறார்.

முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)