30 வயதில் மகளோடு சேர்ந்து பள்ளிக்கு படிக்கச் செல்லும் தாய்

காணொளிக் குறிப்பு, ராதிகா காத்ரி மற்றும் ஜெனிஷா காத்ரி ஆகிய இருவரும் தாய் மகள் ஆவர்.
30 வயதில் மகளோடு சேர்ந்து பள்ளிக்கு படிக்கச் செல்லும் தாய்
பிரசுரிக்கப்பட்டது

ராதிகா காத்ரி மற்றும் ஜெனிஷா காத்ரி ஆகிய இருவரும் தாய் மகள் ஆவர்.

இவர்கள் இருவரும் எஸ்இஇ எனும் ஒரே தேர்வுக்கு படித்து, தேர்வு எழுதியுள்ளனர். 30 வயதாகும் ராதிகா காத்ரி தற்போது பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

15 வயதிலேயே திருமணமான டோலகாவில் பிறந்த ராதிகா காத்ரி தனது பள்ளிப்படிப்பை 5ஆம் வகுப்போடு நிறுத்தியவர். ஆனால், தற்போது அவரது மகளே இளம்பருவத்தை எட்டிவிட்ட நிலையில் மீண்டும் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

அவருக்கு 12ஆம் வகுப்பு வரையாவது படித்து விட வேண்டும் என்று ஆசை. இதற்கு அவரது கணவரான சுந்தர் காத்ரியும், மகளான ஜெனிஷா காத்ரியும் உதவிகரமாக உள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)