ஜப்பான்: குழந்தைகளை அழ வைக்கும் வினோத சடங்கு - க்ரையிங் சுமோ என்பது என்ன?

ஜப்பான்: குழந்தைகளை அழ வைக்கும் வினோத சடங்கு - க்ரையிங் சுமோ என்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் குழந்தைகளை அழ வைக்கும் ஒரு வினோத சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்தச் சடங்கை நாக்கி சுமோ அல்லது க்ரையிங் சுமோ என்று அழைக்கின்றனர்.

அதன்படி, இரண்டு மல்யுத்த வீரர்கள் குழந்தைகளை நேருக்கு நேர் தங்கள் கைகளில் ஏந்திக் கொள்கின்றனர். பேய் மற்றும் தீயசக்தியைக் குறிப்பிட பரவலாகப் பயன்படுத்தும் முகமுடியை அணிந்து ஒரு நபர் குழந்தைகளைப் பயமுறுத்துவார்.

இதில் முதலாவதாக அழும் குழந்தை வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஒருவேளை இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுதால் அதிக சத்தத்துடன் அழும் குழந்தை வென்றதாக அறிவிக்கப்படும்.

ஜப்பானிய நாட்டுப்புற கதைகளின்படி, குழந்தையின் அழுகைக்குத் தீய சக்திகளை விரட்டும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.1991 முதல் கடைபிடிக்கப்படும் இந்தச் சடங்கில் தங்கள் குழந்தைகளைப் பங்கேற்க வைக்க பெற்றோர்கள் பலர் விருப்பப்படுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)