You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரியின் புராதன இரணியல் அரண்மனை – வீடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் இரணியல் அரண்மனை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அப்போதிருந்தே இரணியல் முக்கியமான இடமான இருந்ததாகக் கூறுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள்.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், திருவனந்தபுரத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய நகரமாக இரணியல் இருந்துள்ளது.
ஆனால் மெல்லமெல்ல இந்த அரண்மனை முக்கியத்துவம் இழந்து மன்னரின் உறவினர்கள், உயர் அதிகாரிகள் அல்லது படை வீரர்கள் தங்குவதற்கான இடமாக பயன்பட்டிருக்கிறது.
திருவிதாங்கூர் கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் பிரதான பகுதியான ‘குதிரை மாளிகை’ கட்டைக்குத்து முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் முற்பகுதியில் ஒரு தர்பார் மண்டபம் உள்ளது, உள் பகுதியில் நான்கு அறைகள் உள்ளன. வசந்த மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கருங்கல்லில் செதுக்கப்பட்ட மன்னரின் கட்டில் உள்ளது. மேலும் அரண்மனை வளாகத்தில் ஒரு சிறிய குளமும் உள்ளது.
முன்பு இக்கட்டிடத்தில் இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியங்களும் இருந்ததாகச் சொல்கிறார் ஆய்வாளர் பெருமாள்.
ஆனால், பராமரிப்பு இல்லாததாலும், அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டதாலும் காலப்போக்கில் இது முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது.
தற்போது இதனை அறநிலையத்துறை புனரமைத்து வருகிறது. 4.75 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் முடிவடைய இன்னும் ஒரு வருட காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு, ஒளிப்பதிவு: எஸ். மகேஷ்
படத்தொகுப்பு: ஜனார்த்தனன் மாதவன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்