மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது? இந்த வன்முறை எப்போது அடங்கும்? - கள நிலவரம் - வீடியோ
மணிப்பூர் ஏன் பற்றி எரிகிறது? இந்த வன்முறை எப்போது அடங்கும்? - கள நிலவரம் - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
மணிப்பூர் இப்போது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. ஒரு பகுதி மெய்தேயி சமூகத்தினரிடமும் மற்றொன்று குக்கி சமூகத்தினரிடமும் உள்ளது. கண்ணுக்குத் தென்படும் காட்சிகள் வன்முறை வாரக்கணக்கில் நீடித்ததைக் காட்டுகின்றன. வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன, மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, கிறித்துவத்தைப் பின்பற்றிய குக்கி சமூகம் பழங்குடி அந்தஸ்தைப் பெற்றது. அதே சமயம் மெய்தேயி இந்துக்கள் பட்டியல் சாதியாக மாறினார்கள். மெய்தேயி மக்கள் குக்கி பகுதிகளில் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், இப்போது அவர்களும் பழங்குடி அந்தஸ்து கோருவதே மோதலுக்கு காரணம்.
இந்த வன்முறை எப்போது முடிவுக்கு வரும் என்பதே இப்போதைய கேள்வி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



