பிணவறையில் வேலை பார்க்கும் கர்ப்பிணி

பிணவறையில் வேலை பார்க்கும் கர்ப்பிணி
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், ஒரு கர்பிணி பெண் பிணவறை உதவியாளராக பணியாற்றி வருகிறார். எம்.காம் படித்திருக்கும் வராலு, குடும்ப சூழல் காரணமாக, படித்த உடனேயே திருமணம் செய்துக் கொண்டார். தனியார் நிறுவனத்தில் முதலில் பணியாற்றிய அவர், அரசு வேலை என்பதால் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பெண்ணாக இருப்பதால், பிணவறை சம்பந்தமான கோப்புகள் சம்பந்தமான வேலையாக இருக்கும் என்று நினைத்தார் வராலு. ஆனால் அவரே பிணங்களை கையாள வேண்டும் என்பது பிறகு தான் தெரிய வந்தது. முதலில் தயக்கமும் அச்சமும் கொண்ட வராலு, பின்பு அந்த பணிக்கு மனதளவில் தன்னை தயார் செய்துக் கொண்டார்.

தற்போது தைரியத்துடனும், பொறுமையுடனும் பிணங்களை கையாள்கிறார். உயிருள்ள மனிதர்களை கண்டு தான் பயப்பட வேண்டும், இறந்தவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள் என்கிறார். சுற்றியிருப்பவர்கள் அவர் பிணவறையில் வேலை செய்வது குறித்து விமர்சனம் செய்து வந்தாலும், அவரது குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)