You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கொடைக்கானலில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கொடைக்கானலில் தங்கி உள்ள இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானலுக்கு குறிப்பாக டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
இரான் மீதான தாக்குதலை தொடர்ந்து இரானும் பதில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் கொடைக்கானலில் இருபதுக்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் பகுதிக்கு காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு