'மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் துளையிட்ட திருடன்'- வரலாற்றாசிரியர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, 'மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை துளையிட்ட திருடன்'- வரலாற்றிசிரியர்கள் கூறுவது என்ன?
'மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் துளையிட்ட திருடன்'- வரலாற்றாசிரியர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை. தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பல அரண்மனைகளும் வேறு சில கட்டடங்களும் எஞ்சியிருந்தாலும், இந்த அரண்மனையின் எழில் பிற எல்லாவற்றையும்விட அற்புதமானது.

திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதியே இப்போது எஞ்சியிருக்கிறது. இந்த அரண்மனை கட்டப்பட்ட காரணத்தைவிட, இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டதன் காரணமும் அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளும் சுவாரஸ்யமானவை.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே திறம்மிக்கவராக கருதப்படும் திருமலை நாயக்கர் எனப்படும் , நாயக்க மரபின் ஏழாவது அரசராக கி.பி. 1623ஆம் ஆண்டில் பதவியேற்றார். இதற்குப் பிறகு பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள்வரை திருச்சிராப்பள்ளியே அரசின் தலைநகரமாக இருந்தது. அதன் பிறகு அவர் தன் தலைநகரை மதுரைக்கு மாற்றிக்கொண்டார்.

தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு அந்நகரிலேயே தனக்கென ஒரு அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தார் திருமலை மன்னர். இந்த அரண்மனையின் பெரும் பகுதி கி.பி. 1636ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அரண்மனையில் நடந்ததாக கூறப்படும் ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு