இஸ்ரேல் ஒரு வருடம் தேடிக் கொலை செய்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் யார்?

இஸ்ரேல் ஒரு வருடம் தேடிக் கொலை செய்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் யார்?
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று (அக்டோபர் 17) தெரிவித்தார்.

ஹமாஸ் தலைவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் மூளையாகச் செயல்பட்டவர்’ என்று வர்ணித்தார்.

மேலும் "இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ராணுவ மற்றும் தார்மீக சாதனை. இரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்குக் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ்.

"சின்வாரைக் கொன்றது பணயக் கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்புக்கு வித்திடுவதாகவும், இது காஸாவில் ஹமாஸ் மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய சூழலுக்கு வழி வகுப்பதாகவும்,” அவர் கூறினார்.

முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.

சின்வார் கொல்லப்பட்டதை ஹமாஸ் ஆயுதக்குழு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) உறுதி செய்தது. யார் அவர்?

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)