முதல் சர்வதேச ஹியூமனாய்டு ரோபோ விளையாட்டுகள்

முதல் சர்வதேச ஹியூமனாய்டு ரோபோ விளையாட்டுகள்
பிரசுரிக்கப்பட்டது

மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கேள்விப்பட்டிருப்போம் ஹியூமனாய்டு ரோபோக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை சீனா ஏற்பாடு செய்துள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.

தடகளம், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ரோபோக்கள் போட்டியிடுகின்றன.

தற்போதைய ரோபோட்டிக்ஸை சோதித்துப் பார்த்து மேம்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இது, ஹியூமனாய்டு ரோபோட்டிக்ஸில் சீனா முன்னோடியாக இருக்க செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு