காணொளி: வெனிசுவேலா அருகே இரண்டாவது எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

காணொளி: வெனிசுவேலா அருகே இரண்டாவது எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
பிரசுரிக்கப்பட்டது

வெனிசுவேலா கடற்கரைக்கு அருகே அமெரிக்கா மற்றொரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளது. வெனிசுவேலாவிலிருந்து புறப்பட்ட எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில், வெனிசுவேலா கடற்கரை அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலை அமெரிக்கா கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும்.

தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்கள் வெனிசுவேலாவுக்கு நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாதபடி முற்றுகையிட உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்த பிறகு இவ்வாறு நடந்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்துள்ள வெனிசுவேலா, இது "திருட்டு மற்றும் கடத்தல்" என்று குற்றம்சாட்டியுள்ளது. தங்கள் வளங்களை அமெரிக்கா திருட முயற்சிப்பதாக வெனிசுவேலா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு